உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

சிவகங்கை: சிவகங்கையில் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார். சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சிவப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். தமிழ் சங்க தலைவர் முருகானந்தம், முன்னாள் தலைவர்கள் பகீரத நாச்சியப்பன், கண்ணப்பன், நிறுவன தலைவர் ஜவஹர் கிருஷ்ணன், செயலாளர் பாண்டியராஜன், நிர்வாக குழு முத்துப்பாண்டியன், ரமேஷ் கண்ணன், ராஜேந்திரன், எழுத்தாளர் ஞானபண்டிதன் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காந்திவீதி வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலம் சென்றது. ஏற்பாடுகளை தமிழ்வளர்ச்சித்துறை ஊழியர்கள் செந்தில்குமார், முனியசாமி, பிரபாகரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ