உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இலுப்பக்குடியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலுப்பக்குடியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை; சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு வீரர்களின் சாகச மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் தலைமை வகித்தார். எஸ்.பி.,க்கள் சந்திரன், சந்தன்மிஸ்ரா முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி (தொடக்க) அலுவலர் ஜெயலட்சுமி,ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையில் வீரர்கள் எடுக்கும் பயிற்சி குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், போதை பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி