மேலும் செய்திகள்
'யானைகள் இல்லையேல் மனிதர்கள் இல்லை'
14-Aug-2025
திருப்பாச்சேத்தி: விநாயகர் சதுர்த்தி, ஆவணி முகூர்த்த நாட்களை முன்னிட்டு வாழை இலைகளின் தேவை அதிகரித்துள்ளதால் இலை கட்டுகளின் விலை விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கானுார், மாரநாடு, மடப்புரம், கருங்குளம் பகுதிகளில் வாழை பயிரிடப் படுகிறது. நாடு, ஒட்டு, பச்சை, ரஸ்தாளி, பூவன் வகை வாழைகள் இருப்பினும், இப்பகுதியில் நாடு, ஒட்டு ரகமே அதிகம் பயிரிடப்படுகிறது. 2024 நவம்பரில் வாழை நடவு செய்து விவசாயிகள் தற்போது அதற்கான அறுவடையை துவங்கியுள்ளனர். ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்து வருகின்றனர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதி வாழை இலைகள் பத்து நாட்கள் ஆனாலும் வாடாது. பச்சை நிறமும் மாறாது என்பதால் விரும்பி வாங்குகின்றனர். கடந்த வாரம் வரை 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.400 முதல் 600 வரை விற்றது. ஆக., 27 விநாயகர் சதுர்த்தி, அதனை தொடர்ந்து முகூர்த்தநாட்களாக இருப்பதால் நேற்று திருப்பாச்சேத்திசந்தையில் வாழை இலை கட்டுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. நல்ல தரமான வாழை இலை கட்டு ஒன்று ரூ.1500, வாழைக்காய் தார் ரூ.150 முதல் ரூ.300 வரையும் விற்றது. வியாபாரி செந்தில் கூறியதாவது'' திருப்பாச்சேத்தி பகுதியில் விளையும் வாழை இலைகள் வாடாமல் பச்சை பசேல் என இருக்கும். இதனால் பிற மாவட்ட வியாபாரிகள் அதிகமாக இச்சந்தையில் வாழை இலை கட்டுகள், தார்களை வாங்கி செல்கின்றனர் என்றார்.
14-Aug-2025