உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அடிப்படை வசதி கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

அடிப்படை வசதி கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தனியை சேர்ந்தவர் பழனி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: சாத்தனி கிராமத்தில் பொதுப் பாதையை மீட்டு சீரமைத்து பிரதான சாலைக்கு செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும். குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை நிறைவேற்றக்கோரி 2021ல் கலெக்டர், இளையான்குடி ஆர்.டி.ஓ., வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப் பிட்டார். நீதிபதிகள் பி.வேல் முருகன், பி.முருகன் அமர்வு பிறப்பித்த உத் தரவு: மனுவை 2021ல் அனுப்பியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரி சீலிக்கவோ அல்லது அதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கவோ இல்லை. கலெக்டர் பரிசீலித்து, சட்டத்திற்குட்பட்டு 3 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி