ஓசிக்கு வாங்கி அசிங்க பேச்சு அலைபேசி கொடுத்தவருக்கு அடி
மானாமதுரை: மானாமதுரையில் அலைபேசியை ஓசியாக வாங்கி பேசியவர் அசிங்கமாக பேசியதால் அலைபேசியை கொடுத்தவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் உளுத்திமடை கிராமத்தை சேர்ந்த நாகமலை மகன் பாலமுருகன் 28, இவர் மானாமதுரையில் உள்ள செங்கல் சேம்பரில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நின்ற போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒருவர் பாலமுருகனிடம் அலைபேசியை ஓசியாக வாங்கி ஓரமாக சென்று மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு போன் செய்து அசிங்கமாக திட்டிவிட்டு மீண்டும் பாலமுருகனிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.15 நிமிடங்கள் கழித்து அப்பகுதிக்கு வந்த ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சிவா 20, அலெக்ஸ் 26 3 பேரும் பாலமுருகன் தான் அசிங்கமாக பேசியதாக நினைத்து அவரை தாக்கினர். பாலமுருகன் மானாமதுரை போலீசில் கொடுத்த புகாரில் போலீசார் மேற்கண்ட 3 பேரையும் கைது செய்து அலைபேசியை ஓசியாக வாங்கி அசிங்கமாக பேசியவரை தேடி வருகின்றனர்.