போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருட்டு
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருடு போனது போலீசாரை அதிர்ச்சிக்குஉள்ளாக்கியுள்ளது.திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கார், பைக், லாரி உள்ளிட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திலும், அருகில் உள்ள கவாத்து மைதானத்திலும் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். சில மாதங்களுக்கு முன் முதுகுளத்துாரைச் சேர்ந்த ஆகாஷ் 20, பைக்கில் கஞ்சா கடத்தி வரும்போது திருப்புவனம் போலீசாரால் பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்ததுடன், பைக்கையும் பறிமுதல் செய்து ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தியிருந்தனர். இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது பைக்கை கோர்ட்டில் ஒப்படைக்க தேடிய போது காணவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறப்பு எஸ்.ஐ., சிவக்குமார் புகார்படி இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்கு பதிந்து ஸ்டேஷன்சிசி டிவி பதிவுகளை ஆய்வு செய்து பைக்கை திருடி சென்றவர்களை தேடி வருகிறார். போலீஸ் ஸ்டேஷனிலேயே பைக் திருடு போனது போலீசாரை அதிர்ச்சிக்குஉள்ளாக்கியிருக்கிறது.