உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தகராறை தடுக்க சென்ற பா.ஜ.,  பிரமுகர் கொலை

தகராறை தடுக்க சென்ற பா.ஜ.,  பிரமுகர் கொலை

சிவகங்கை ; சிவகங்கை பா.ஜ., பிரமுகரை கொலை செய்த ஐவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். சிவகங்கை பா.ஜ., வர்த்தக பிரிவு மாவட்ட செயலர் சதீஷ்குமார், 49; சிவகங்கை வாரச்சந்தைக்குள் உள்ள நகராட்சி கடையில் டூ வீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாளராக மணிபாரதி பணிபுரிந்தார். இருவரும், கடைக்கு பின்னால் அறை எடுத்து தங்கினர். இவர்கள் அறைக்கு அருகில் உள்ள அறையில் டிரம்ஸ் வாசிக்கும் ஐந்து பேர் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு டிரம்ஸ் வாசிக்கும் குரூப்பை சேர்ந்த ஐந்து பேர் மது அருந்தினர். அவர்களுடன் மணிபாரதியும் மது அருந்தியுள்ளார். அப்போது அந்த கும்பலுக்கும், மணிபாரதிக்கும் தகராறு ஏற்பட்டது. சதீஷ்குமார் விலக்கி விட சென்ற போது, கும்பல் அவரை தள்ளிவிட்டதில் சதீஷ்குமார் கீழே விழுந்து இறந்தார். டிரம்ஸ் குழுவை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை