உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் தகராறில் தம்பி கொலை

டூவீலர் தகராறில் தம்பி கொலை

பூவந்தி: திருப்புவனம் அருகே மஞ்சக்குடியில் தன்னை கேட்காமல் டூவீலரை எடுத்துச் சென்ற தம்பியை அண்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். திருப்புவனம் அருகே மஞ்சகுடி பாலகிருஷ்ணன் மகன்கள் தர்மேந்திரன் 34, தயாளன் 25, இரு வரும் அருகருகே வீடுகளில் வசிக்கின்றனர். தர்மேந்திரனின் டூவீலரை தயாளன் கேட்காமல் மதுரைக்கு எடுத்துச் சென்ற தால் தம்பி தயாளனை கண்டித்துள்ளார். ஆத் திரத்தில் தயாளன் கடப்பாரையை எடுத்து டூவீலரை சேதப்படுத்தியுள்ளார். ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தம்பி தயாளனை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பூவந்தி போலீசார் தர்மேந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ