உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் அருகே மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்துார் அருகே மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே அச்சரம்பட்டியில் கிராமத்தினர், இளைஞர்கள் சார்பில் தீபாவளி,தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் 10 வண்டிகள் பங்கேற்றன. மாவூர் தேவதாரணி, அச்சரம்பட்டி மாதவன்,நெய்வாசல் மாயாண்டி முதல் மூன்று இடங்களை வென்றனர். சின்னமாடு பிரிவில் 21 வண்டிகள் பங்கேற்றதால் இரு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. முதல் பிரிவில் கானாடுகாத்தான் சோலையாண்டவர்,கோனாப்பட்டு கொப்புடையம்மன்,மணச்சை மணிக்காளை புகழேந்தி, இரண்டாம் பிரிவில் கோட்டையூர் சிதம்பரம், மாவூர் ராமச்சந்திரன், தேத்தாம்பட்டி பதினெட்டாம்படி அய்யனார் முதல் மூன்று இடங்களை வென்றனர். காட்டாம்பூர் பந்தயம் காட்டாம்பூர் தர்மபுல்லணி அய்யனார் கோயில் மண்டலாபி ேஷக நிறைவை முன்னிட்டு காட்டாம்பூர்- - திருக்கோஷ்டியூர் வரை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் 10 வண்டிகள் பங்கேற்றன. விராமதி தையல்நாயகி,திருப்புத்துார் கலையரசு, மருதங்குடி தர்மசாஸ்தா, காரைக்குடி சிவா ஆகியோர் முதல் நான்கு இடங்களை வென்றனர். சின்ன மாடு பிரிவில் 16 வண்டிகள் பங்கேற்றன. மேலவளவு பன்னீர் செல்வம், சூரக்குண்டு ஏ.எஸ்.சாஸ்தா, மருதங்குடி தர்மசாஸ்தா, வெள்ளலுார் நாடு காட்டுத்தீ ஆகியோர் முதல் நான்கு இடங்களை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !