மேலும் செய்திகள்
உயர்வுக்கு படி சிறப்பு முகாம்
25-Aug-2025
சிவகங்கை : புழுதிபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் உயர்வுக்கு படி சிறப்பு முகாம் நடைபெற்றது. தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஸ் வெங்கட் வத்ஸ் துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சிங்கார வேலன் உயர்கல்வியில் உள்ள படிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். முகாமில் கல்லுாரிகளில் 10 மாணவர்கள், அரசு ஐ.டி.ஐ.,யில் 10 மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை நடைபெற்றது. கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து வங்கியாளர் கார்த்திக் பேசினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுபாஷினி, சிங்கம்புணரி தாசில்தார் நாகநாதன், மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல், கலெக்டர் பி.ஏ.,( கல்வி) ஜெயப்பிரகாசம், ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ நன்றி கூறினார்.
25-Aug-2025