சிவகங்கையில் உயர்வுக்கு படி முகாம்
சிவகங்கை: சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி வளாக கருத்தரங்கு கூடத்தில் நாளை (ஆக.,22) பள்ளி மாணவர்களுக்கான உயர்வுக்கு படி முகாம் நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது,மாவட்ட அளவில் 2024---2025 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற, பெறாத, தேர்வு எழுதாத நிலையில் 1291 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் பயன்பெறும் விதமாக நாளை (ஆக.,22) காலை 10:00 மணிக்கு உயர்வுக்கு படி முகாம் சிவகங்கையில் நடைபெறும். இவர்கள் கல்லுாரி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் சேர்க்கை செய்ய இம்முகாம் பயன்பெறும். இரண்டாம் கட்டமாக இம்முகாம் ஆக.,29 அன்று சிங்கம்புணரி, 3ம் கட்டமாக செப்., 3 அன்று காரைக்குடி, நான்காம் கட்டமாக செப்., 9 அன்று சிவகங்கையில் நடைபெறும். இம்முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.