ஆவரங்காட்டில் கால்வாய் சீரமைப்பு
மானாமதுரை: ஆவரங்காடு கிராமத்தில் மாரநாடு கண்மாயிலிருந்து வரும் கால்வாயில் ஆங்காங்கே இருந்த உடைப்பு களால் தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஆவரங்காடு ஊராட்சி நிர்வாகத்தினர் கால்வாய்களில் இருந்த உடைப்பு களை சரிசெய்தனர்.