உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து அறிவிப்பில்லாத மின்வெட்டு

அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து அறிவிப்பில்லாத மின்வெட்டு

காரைக்குடி: காரைக்குடியில் அறிவிக்கப்பட்ட மின்தடை திடீர் ரத்து, அறிவிப்பு இல்லாத தொடர் மின்வெட்டால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.காரைக்குடி மாநகராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. பராமரிப்பு பணி காரணமாக, மின் வாரியம் சார்பில் மின்தடை அறிவிப்பு செய்யப்படுகிறது. மின்தடை அறிவிப்பு காரணமாக சிறிய கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை விடுமுறை மற்றும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியஉள்ளது. முன்னேற்பாடு செய்த நிலையில் மின்தடை எந்த அறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்படுகிறது.விடுமுறை விடப்பட்ட பல கடைகளில் வியாபாரம் முற்றிலும் பாதிப்படைகிறது. இதே போல் பராமரிப்பு பணி மின்கம்ப பணி என அடிக்கடி முன் அறிவிப்பில்லாத மின்வெட்டும் ஏற்படுகிறது. நேற்று காரைக்குடி செக்காலை, காலேஜ் ரோடு பகுதியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது. விடுமுறை நாட்களிலும், மின்தடை நாட்களிலும் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை