மாத்துார் ரேஷன் கடை திறக்க தாமதம் கார்டுதாரர்கள் புகார்
காரைக்குடி : காரைக்குடி அருகே மாத்தூர் ரேஷன் கடையை விற்பனையாளர் தினமும் காலதாமதமாக திறப்பதாக கூறி கார்டுதாரர்கள் புகார் தெரிவித்தனர். மாத்துாரில் உள்ள ரேஷன் கடையில் பெரிய, சின்னமாத்து, மணக்காடு, காட்டுகுடியிருப்பு, கணேசபுரம் பகுதியை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை பெற்று வருகின்றனர். நேற்று காலை 11:00 மணி வரை ரேஷன் கடையை திறக்க விற்பனையாளர் வரவில்லை. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக கார்டுதாரர்கள் காத்திருந்தனர். இது போன்று மாத்துார் ரேஷன் கடையை விற்பனையாளர் காலதாமதமாக திறப்பதாக புகார் தெரிவித்தனர்.