மேலும் செய்திகள்
கண்தான விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கு
05-Sep-2025
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 9 மாதத்தில் 918 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளதாக டாக்டர்கள் குழு தெரிவித்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 2012ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவில் தினசரி புற நோயாளிகளாக 80க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை, கண் தசை அறுவை சிகிச்சை, கண் அழுத்த அறுவை சிகிச்சை, கருவிழி அறுவை சிகிச்சை, கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, கண்ணீர்ப்பை அறுவை சிகிச்சை, சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கண்ணில் ஏற்படக்கூடிய ரத்தக் கசிவிற்கு லேசர் மூலம் சிகிச்சை செய்யப்படுகிறது. இங்கு 2021 ஆம் ஆண்டு 399, 2022ல் 2,286, 2023ல் 2,512, 2024ல் 1959 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜன. முதல் செப். வரை 918 நபர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
05-Sep-2025