உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிகிதா நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிய சி.பி.ஐ.,

நிகிதா நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிய சி.பி.ஐ.,

திருப்புவனம்:மடப்புரத்திற்கு வந்த பேராசிரியை நிகிதாவின் நகை திருட்டு வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றவாளிகளை நெருங்கியுள்ளனர். மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பேராசிரியை நிகிதா ஜூன் 27ல் மடப்புரம் கோயிலுக்கு காரில் தனது தாயாருடன் வந்த போது காரில் வைத்திருந்த 9.5 பவுன் நகை, ரூ.2500 திருடு போனது. மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையின் போது கடுமையாக தாக்கியதில் கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் 29, ஜூன் 28ல் உயிரிழந்தார். தனிப்படை போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்த நிலையில் நகை திருட்டு வழக்கையும் சி.பி.ஐ., விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் நகை திருட்டு தொடர்பாக வழக்கு பதிந்து, விசாரணையை தொடங்கினர். திருப்புவனம், பூவந்தியில் தனியார் நகை அடகு கடைகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய வங்கிகளில் ஜூன் 27 முதல் நகை அடமானம் வைத்தவர், மீட்டவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர். குறிப்பிட்ட சிலரின் வங்கி கணக்கும் கண்காணிப்பில் வைத்துள்ளனர். ஜூன் 27ம் தேதி கோயில் வளாகம் மற்றும் அஜித்குமார் வீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் ஆகியவற்றில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த பதிவுகள் மூலம் நகை திருட்டு வழக்கு குற்றவாளிகளை சி.பி.ஐ., நெருங்கிவிட்டது. விரைவில் அவர்களை கைது செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை