உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரம் வணிக வளாகத்தில் விசாரணை செய்த சி.பி.ஐ.,

மடப்புரம் வணிக வளாகத்தில் விசாரணை செய்த சி.பி.ஐ.,

திருப்புவனம்: அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக நேற்று மதியம் மடப்புரத்தில் வணிக வளாக கட்டடத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் கொலை வழக் கு சம்பந்தமாக ஜூலை 12 முதல் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை ஆத்திகுளத்தில் சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையில் ஒரு குழுவும்,இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் திருப்புவனத்தில் ஒரு குழுவும் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் மடப்புரம் விலக்கில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஒரு மணி நேரமாக ஆய்வு செய்தனர். கோயில் எதிரே உள்ள வணிக வளாக அறை எண் 5ல் சி.பி.ஐ., அதிகாரிகள் அஜித்குமார் தாயார் மாலதி, உறவினர் ரம்யா, அஜித்குமார் மாமா மகன் சரவணக்குமார் ஆகியோரிடம் நேற்று இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். தாயார் மாலதியிடம் ஜூன் 27 ல் அஜித்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றது எப்போது தெரியும், அஜித்குமாரை எங்கு வைத்து பார்த்தீர்கள், அவரிடம் என்ன பேசினீர்கள் என விசாரணை நடத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி