உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அஜித்குமார் கொலை வழக்கு வாக்கு மூலத்தை சரிபார்க்கும் சி.பி.ஐ.,

அஜித்குமார் கொலை வழக்கு வாக்கு மூலத்தை சரிபார்க்கும் சி.பி.ஐ.,

திருப்புவனம்:அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., ஜூலை 12 முதல் சிசிடிவி., காட்சிகள் அடிப்படையிலும், சாட்சியங்கள் அடிப்படையிலும் தனித்தனி குழுவாக விசாரிக்கின்றனர். திருப்புவனம் நீதிமன்றத்தில் இருந்து அஜித்குமார் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியில் சி.பி.ஐ.,அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வாக்கு மூலங்களில் வித்தியாசம் இருந்தால் மீண்டும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்க உள்ளனர்.

மின்துண்டிப்பால் பாதிப்பு

திருப்புவனத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் விசாரணை பாதிக்கப்படுகிறது. போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் ஜெனரேட்டர் வசதி இல்லை. இதனால் மின்சாரம் மீண்டும் வரும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. சாட்சிகள் அனைவரும் திருப்புவனம், மடப்புரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் 5 நாட்கள் திருப்புவனத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போதும் பல முறை மின் தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகளை நீதிபதி பலமுறை அழைத்து கண்டித்தார். தற்போது சி.பி.ஐ., விசாரணையின் போதும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் சாட்சிகள் அனைவரையும் மதுரை சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ