உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஒன்றியக்குழு கூட்டம் புறக்கணிப்பு சேர்மன், கவுன்சிலர்கள் புலம்பல்

ஒன்றியக்குழு கூட்டம் புறக்கணிப்பு சேர்மன், கவுன்சிலர்கள் புலம்பல்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியக் குழு கூட்டத்திற்கு, அரசின் பிற துறை அலுவலர்கள் வராமல் புறக்கணிப்பதால் மக்கள் பிரச்னைகளை தெரிவிக்க முடியாமல் அவதிப்படுவதாக சேர்மன் கவுன்சிலர்கள் புலம்பினர்.சிங்கம்புணரி ஒன்றியக் குழு கூட்டம் சேர்மன் திவ்யா பிரபு தலைமையில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மேலாளர் ஜெயஸ்ரீ தீர்மான நகல் வாசித்தார். கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய குழுத் துணைத் தலைவர் சரண்யா ஸ்டாலின், கவுன்சிலர்கள் கலைச்செல்வி, ரம்யா, உமா, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரியகருப்பி, இளங்குமார், சசிகுமார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். ஒன்றியக்குழு கூட்டத்திற்கு அரசின் பிற துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் வருவதில்லை, சிலர் மட்டும் எப்போதாவது வந்து செல்கிறார்கள். இதனால் தங்கள் பகுதிக்குரிய அத்துறை சார்ந்த பிரச்னைகளை எடுத்துக் கூற முடியாமல் சிரமப்படுவதாக சேர்மன், கவுன்சிலர்கள் கவலை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி