திருப்புத்துாரில் ரத ஊர்வலம்
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப்பெருவிழா 9ம் நாளை முன்னிட்டு நேற்று அம்மன் ரதத்தில் வலம் வந்தார்.ஏப்.17ல் பூச்சொரிதல் விழா நடந்தது. மறுநாள் கொடியேற்றத்துடன் காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. தினசரி இரவில் அலங்காரத்தில் அம்பாள் திருக்குளத்தை வலம் வந்தார்.நேற்று இரவு 7:00 மணிக்கு உற்ஸவ அம்மன் அலங்காரத்தில் ரதத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்களால் வடம் பிடித்து ரத ஊர்வலம் துவங்கியது.இன்று காலை 7:00 மணிக்கு தீர்த்தவாரி மஞ்சள் நீராட்டும், இரவு 7:00 மணிக்கு தெப்பத்திருவிழா, திருக்குள தீபவழிபாடும் நடைபெறும்.