உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்கோஷ்டியூரில் மே 10ல் சித்திரை தேர்

திருக்கோஷ்டியூரில் மே 10ல் சித்திரை தேர்

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவத்தை முன்னிட்டு மே10ல் தேரோட்டம் நடைபெறுகிறது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரையில் 12 நாட்கள் பிரமோத்ஸவம் நடைபெறும். மே 1ல் கொடியேற்றத்துடன் உத்ஸவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை சுவாமி பல்லக்கிலும், இரவு வாகனங்களிலும் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. ஆறாம் நாளில் ஆண்டாள் சன்னதியில் சுவாமி மாலை மாற்றுதலும், நேற்று மாலை ராஜகோபுர வாசலில் சுவாமிக்கு சூர்ணாபிஷேகமும் நடந்தது. இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி திருவீதி வலம் வந்தார்.இன்று காலை திருவீதி புறப்பாடும், இரவில் தங்க குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். மே 10ல் பத்தாம் நாளை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும். காலை 8:30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளலும், மாலை 5:00 மணிக்கு தேர் வடம் பிடித்தலும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ