| ADDED : டிச 30, 2025 05:43 AM
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உள்ள சர்ச்கள் மற்றும் கோயில்கள் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வண்ண,வண்ண விளக்குகளால் அலங் காரம் செய்யப்பட்டு தயாராகி வருகிறது. மானாமதுரை, இளையான்குடி பகுதியில் நாளை மறுநாள் பிறக்க உள்ள புத்தாண்டுக்காக இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் மற்றும் மானாமதுரையில் உள்ள புனித குழந்தை தெரசாள் சர்ச், நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ., சர்ச் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சுகளிலும், இளையான்குடி, சாலைக் கிராமம், சூராணம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி களில் உள்ள சர்ச்சுகளில் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இடைக்காட்டூர் சர்ச்சில் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு பாதிரியார்கள் சிறப்பு திருப்பலியை நடத்த உள்ளனர். புத்தாண்டு பிரார்த்தனையில் மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதே போன்று மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் உள்ள சிவன் கோயில்கள் மற்றும் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளன.