உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சி.ஐ.டி.யூ., மாவட்ட மாநாடு

சி.ஐ.டி.யூ., மாவட்ட மாநாடு

சிவகங்கை : சிவகங்கையில் இந்திய தொழிற்சங்க சி.ஐ.டி.யூ., மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் வீரையா தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் உமாநாத் தீர்மானம் வாசித்தார். வேங்கையா வரவேற்றார். மாநில துணை பொது செயலாளர் குமார் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சேதுராமன் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, மாநில துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர். கருணாநிதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி