மேலும் செய்திகள்
அரசு மணல் குவாரி திறக்க லாரி உரிமையாளர்கள் மனு
06-Feb-2025
காரைக்குடியில் பொதுமக்கள் இளைஞர்கள் சிறுவர்கள் பயிற்சி பெற ஸ்டேடியம் இல்லை. அழகப்பா பல்கலை மற்றும் கல்லூரி விளையாட்டு திடலை பொதுமக்கள் எப்போதும் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் விளையாட்டு தொடர்பான ஊக்கப்படுத்துதல் இல்லாமல் பல வீரர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை உருவானது. சிறுவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு என பொது ஸ்டேடியம் அமைக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக, விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில், மாங்குடி எம்.எல்.ஏ., சட்டசபையில் ஸ்டேடியம் அமைக்க கோரிக்கை விடுத்தார். விளையாட்டுத்துறை அலுவர்கள் சங்கராபுரம் என்.ஜி.ஓ., காலனியில் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர். தொடர்ந்து, காரைக்குடியில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. மினி ஸ்டேடியம் திறப்பு
காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், 9 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் கட்டப்பட்டது. மார்ச் 4ம் தேதி, ஸ்டேடியத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். ஓடுதளம், வாலிபால், கூடைப்பந்து, கோ கோ, கபடி மைதானம் பார்வையாளர் அமரும் கேலரி, பொருட்கள் வைப்பறை, அலுவல அறை, குளியலறை கழிப்பறை ஏற்பட பல்வேறு வசதிகளுடன் ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது. எம் சாண்ட், கிரஷர் மணல் பெற்றோர்கள் புகார்
பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, மினி ஸ்டேடியத்தில் வீரர்கள் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது. நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் பயிற்சியிடம், வாலிபால் விளையாடும் இடத்தில் ஆற்று மணலுக்கு மாற்றாக எம் சாண்ட், கிரஷர் மண் கொட்டப்பட்டுள்ளது. ஆற்று மணல் இருந்தால் மட்டுமே மாணவர்கள் காயமின்றி விளையாட முடியும். உடலுக்கும் எந்த தீங்கும் இல்லை. ஆனால் எம் சாண்ட், கிரஷர் மணலால் உடலில் காயங்கள் ஏற்படுவதோடு, பல்வேறு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.விளையாட்டு அலுவலர் கூறுகையில்: எம் சாண்ட் கொட்டப்பட்டது குறித்து புகார் வந்தது. அதனை நீக்கி விட்டு ஆற்று மணல் கொட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அரங்கத்தில் பயிற்சியாளர், தூய்மை பணியாளர்கள், வாட்ச்மேனும் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்.
06-Feb-2025