மேலும் செய்திகள்
மாவட்டத்தில் 'டாக்பியா' வேலை நிறுத்தம்
22-Oct-2024
சிவகங்கை:கூட்டுறவு வங்கி பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் எதிரொலியாக, மானிய தொகை ரூ.103 கோடியை விடுவித்தது மட்டுமின்றி போனசையும் 20 சதவீதமாக உயர்த்தி அரசு அறிவித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 4,350 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ், ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களுக்கு அரசு, மானியம் வழங்கி வருகிறது. 2020-- 2021ம் ஆண்டிற்கான மானிய தொகை ரூ.460 கோடியில், மூன்றாம் கட்ட மானிய தொகையாக ரூ.103 கோடியை அரசு தற்போது விடுவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக 2020-- 2021 ம் ஆண்டிற்கு அரசு வழங்க வேண்டிய மானிய தொகை ரூ.460 கோடியில், 2021 ல் ரூ.150 கோடி, 2022 ம் ஆண்டில் ரூ.195 கோடியே 18 லட்சம் விடுவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பின் எஞ்சிய மானிய தொகையை அரசு விடுவிக்கவில்லை.இந்த மானிய தொகையை விடுவிக்க வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் அக்., 21 முதல் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, கூட்டுறவு துறை நிர்வாகம் 2020--2021 ம் ஆண்டிற்கு ரேஷன் கடைகளுக்கான மானிய நிலுவை தொகை ரூ.103 கோடியே 56 லட்சத்து 39 ஆயிரத்து 780 யை விடுவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் மட்டுமே அறிவித்தது. போராட்டத்தின் பலனாக தீபாவளி போனஸ் 20 சதவீதமாக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது என ஊழியர்கள் தெரிவித்தனர். ஊழியர்களுக்கு தீபாவளி
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் பி.காமராஜ்பாண்டியன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 4,350 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில், 1000 சங்கங்கள் நலிவடைந்துள்ளன. இந்த சங்க ஊழியர்கள் பல மாதங்கள் சம்பளம் எடுக்க முடியாமல் உள்ளனர். தீபாவளி நேரத்தில், மானியத்தை விடுவித்தது. போனஸ் 20 சதவீதமாக உயர்த்தி வழங்குவது, நலிவடைந்த சங்க ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டு கூட்டுறவு ஊழியருக்கு 'சரவெடி' தீபாவளி தான், என்றார்.
22-Oct-2024