உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பட்டா பெயர் மாற்றம், திருத்தம் செய்ய உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வாய்ப்பு :கலெக்டர் பொற்கொடி தகவல்  

பட்டா பெயர் மாற்றம், திருத்தம் செய்ய உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வாய்ப்பு :கலெக்டர் பொற்கொடி தகவல்  

சிவகங்கை: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பட்டா பெயர் மாற்றம், திருத்தம், நகல், பிறப்பு இறப்பு சான்று, வாரிசு சான்றுகளும் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, நாளை (ஜாலை 22) காரைக்குடி மாநகராட்சி வார்டு 22,23 மற்றும் 30 பகுதி மக்களுக்கு நுாறடி ரோடு விஜயமகால், சிவகங்கை நகராட்சி வார்டு 7 முதல் 10 வரை மக்களுக்கு சிவகங்கை கோட்டபத்து அகமுடையார் திருமண மண்டபம், இளையான்குடி பேரூராட்சி வார்டு 1 முதல் 6 வரை இளையான்குடி எம்.எஸ்., மகால், திருப்புத்துார் ஒன்றியம், பிள்ளையார்பட்டி சமுதாயக்கூடம், சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.மாம்பட்டி சமுதாயக்கூடம், திருப்புவனம் ஒன்றியம் தனபாக்கியம் மகாலில் இம்முகாம் நடைபெறும்.முகாமில் சொத்து, குடிநீர் வரி, கழிவு நீர் இணைப்பு, அடிப்படை வசதிகள், பிறப்பு இறப்பு சான்று, காலி மனையிட வரி, வியாபாரி அடையாள அட்டை, சொத்து வரி பெயர் மாற்றம், கட்டட அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.அதே போன்று வருவாய்துறை மூலம் பட்டாவில் பெயர் மாற்றம், திருத்தம், பட்டா சிட்டா நகல், பிறப்பு இறப்பு, வாரிசு, ஜாதி, இருப்பிட சான்றுகளுக்கும் விண்ணப்பிக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை