| ADDED : ஜன 23, 2024 04:31 AM
தேவகோட்டை; அயோத்தியில் ராமர் கோயிலில் பாலராமர் பிராண பிரதிஷ்டை செய்ததை தொடர்ந்து தேவகோட்டை பகுதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன.நகர இந்து முன்னணி சார்பில் தியாகிகள் பூங்கா அருகில் ராமர் படம் வைத்து அன்னதானம் வழங்குவதாக அறிவித்து இருந்தனர். போலீசார் அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தேவகோட்டை இந்து முன்னணி நகர தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட தலைவர் பாலா, ஒன்றிய தலைவர் கணேசன், பா.ஜ. வீரையா உட்பட இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் ராமர் படங்களை வைத்து பூஜைசெய்து பக்தர்களுக்கு உணவு வழங்கினர்.கோதண்டராமர் கோயிலில் கோதண்டராமர் ஸ்வாமி, சீதை லட்சுமணன், அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் கோதண்டராமர், சீதை லட்சுமணன் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகளுக்குப் பின் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.சவு பாக்ய துர்கை அம்மன் கோயிலில் பெண்கள் பூஜை சீர் பொருட்கள், ராமபிரான் படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது சிறப்பு பூஜைகள் நடந்தன.தேவகோட்டை அருகே தேரளப்பூர் சிறுவனூர் பசுபதி நாதர் கோயிலில் பா.ஜ.,சார்பில் பசுபதி நாதர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்பூஜைகள் நடந்தன. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பழனியப்பன், கண்ணங்குடி மண்டல தலைவர் ஆனந்தன், கிளை தலைவர் முத்து பங்கேற்றனர்.