அரசியலமைப்பு தின விழா
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் அரசியல் மற்றும் பொது நிர்வாக துறை மற்றும் வணிகவியல் துறை சார்பில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது. துணைவேந்தர் க.ரவி தலைமையேற்றார்.ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ராஜாராம், முன்னாள் பேராசிரியர் ஜவஹர்லால் நேரு பேசினர். மாணவர்களுக்கு வினாடி வினா, கட்டுரை போட்டி மற்றும் மாதிரி நாடாளுமன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர் நெடுமாறன் நன்றி கூறினார்.