உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அரசியலமைப்பு தினம் கடைபிடிப்பு

 அரசியலமைப்பு தினம் கடைபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராதிகா முன்னிலை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி பார்த்தசாரதி, மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், குடும்ப நல நீதிபதி பசும்பொன் சண்முகையா, சார்பு நீதிபதி பாண்டி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் செல்வம், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் தங்கமணி, மாவட்ட உரிமையில் நீதிபதி தீபதர்ஷினி வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைசாமி, சட்ட பாதுகாப்பு அமைப்பு தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டனர். சட்ட விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதன்மை நீதிபதி பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை