உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கூட்டுறவு வார விழா 

கூட்டுறவு வார விழா 

சிவகங்கை: சிவகங்கையில் கூட்டுறவு வார மற்றும் குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.சிவகங்கை கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் கொடியேற்றியும், மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் வரவேற்றார். மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, துணை பதிவாளர்கள் நாகராஜன், பாபு, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ், நகராட்சி தலைவர் துரை ஆனந்த், துணை தலைவர் கார்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் பங்கேற்றனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ