உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி மாநகராட்சியில் அனைத்து பணிகளிலும் ஊழல்

காரைக்குடி மாநகராட்சியில் அனைத்து பணிகளிலும் ஊழல்

காரைக்குடி; காரைக்குடி மேயர் முத்துதுரை செயல்பாடுகளை பார்த்து மக்கள் அச்சப்படுகின்றனர். அதிகாரிகள் பணி மாற்றம் கேட்கின்றனர். மேயர் யாரையும் மதிப்பதில்லை. காரைக்குடி மாநகராட்சியில் அத்தனை பணிகளிலும் ஊழல் நடக்கிறது என அமைப்பு செயலாளர் சீனிவாசன் பேசினார்.காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் சீனிவாசன் பேசுகையில்: காரைக்குடி மேயர் செயல்பாடுகளை பார்த்து மக்கள் அச்சப்படுகின்றனர். அதிகாரிகள் பணி மாற்றம் கேட்கின்றனர். மேயர் யாரையும் மதிப்பதில்லை. காரைக்குடி மாநகராட்சியில் அத்தனை பணிகளிலும் ஊழல் நடக்கிறது.ரூ. 60 கோடிக்கு முன் அனுமதி வழங்கி, ஒப்பந்த பணியை ஒதுக்கீடு செய்துள்ளார்.இது சம்பந்தமாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தை 99 வருடத்திற்கு குத்தகைக்கு விடுகிறார். சதுர அடி 70 ரூபாய்க்கு விட வேண்டிய மாநகராட்சி இடத்தை ரூ. 15 க்கு விடப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு பெரும் இழப்பு. மின்விளக்கு டெண்டரில் ஊழல் நடந்துள்ளது. காரைக்குடி மாநகராட்சியில் ஒவ்வொரு முறையும், ஒப்பந்தத்திற்கு முன் அனுமதி வழங்கப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தால் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றார். ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், தலைமை கழக பேச்சாளர் நாகையன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உமாதேவன், கற்பகம், குணசேகரன், காரைக்குடி நகரச் செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை முன்னாள் சேர்மன் சரண்யா, காரைக்குடி மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி