உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தெருக்களில் தரமற்ற விளக்குகள் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

தெருக்களில் தரமற்ற விளக்குகள் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

இளையான்குடி: இளையான்குடியில் தரமற்ற தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் மழை பெய்தாலே அவை எரிவதில்லை என கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சண்முகம் வரவேற்றார். தலைமை அலுவலர் முருகன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள்: நாகூர் மீரா, அ.தி.மு.க., கவுன்சிலர்: தெருக்களில் புதிதாக போடப்பட்ட எல்.இ.டி., விளக்குகள் தரம் இல்லாமல் இருப்பதால் சிறிய மழை பெய்தாலே எரிவதில்லை. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.செயல் அலுவலர் சண்முகம்: நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.ஷேக் ஹமீது 14 வது வார்டு கவுன்சிலர்: புதிய பஸ் ஸ்டாண்ட்டிற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், கீழாயூர் பழைய ரோட்டில் புதிதாக மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.தலைவர் நஜூமுதீன், செயல் அலுவலர் சண்முகம்: கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.கூட்டத்தில் துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை