உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குப்பை கிடங்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு

குப்பை கிடங்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு

இளையான்குடி: இளையான்குடியில் குப்பை கிடங்கு நகர் பகுதியில் அமைப்பதற்கு பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராஜவேலு, அப்துல்ஹமீது எதிர்ப்பு தெரிவித்தனர்.இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜுமுதீன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் இப்ராஹீம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சண்முகம் வரவேற்றார்.முதுநிலை எழுத்தர் முருகன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் தங்கள் வார்டுகளில் குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதற்கு கவுன்சிலர்கள் ராஜவேலு, அப்துல்ஹமீது எதிர்ப்பு தெரிவித்தனர். கவுன்சிலர் ராஜவேலு பதவியை ராஜினாமா செய்து விட்டு போராட்டம் நடத்துவேன் என எச்சரித்தார். இளையான்குடியில் நாய்கள், மாடுகள் தொல்லை அதிகம் இருப்பதாக புகார் கூறினார்.அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் தோண்டப்பட்ட குழிகளை முறையாக மூட வேண்டும், குடி நீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.இளையான்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறை சேதமடைந்ததால் உயிரிழந்தவர்களை சிவகங்கை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.இதனால் இறப்பு நேரத்தில் கூட அலைக்கழிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர் என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். செயல் அலுவலர் சண்முகம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை