கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சி கூட்டம் தலைவர் சேங்கைமாறன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சங்கர்கணேஷ் வரவேற்றார். 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவாதத்தின் போது த.மா.கா., கவுன்சிலர்கள் அயோத்தி, பாரத்ராஜா, வெங்கடேஷ்வரி ஆகியோர் தங்களது வார்டுகளில் நலத்திட்ட பணிகள் எதுவும் செய்யவில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தனர்.