உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண்களுக்கு மானிய விலையில்  நாட்டுக்கோழி இன குஞ்சுகள் 

பெண்களுக்கு மானிய விலையில்  நாட்டுக்கோழி இன குஞ்சுகள் 

சிவகங்கை: கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி குஞ்சு வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் தமிழக அளவில் 38,700 பெண்களுக்கு ரூ.6.45 கோடி செலவில் நாட்டின கோழி குஞ்சுகள் பயனாளிக்கு 40 வீதம், 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் 1200 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏழை, விதவை, கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முன்னுரிமை தரப்படும். இதில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பயனாளியும் ரூ.3200க்கு 40 கோழி குஞ்சுகளை கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கான சுய சான்று வழங்கிய செலவின ரசீதுகளை சமர்பித்த உடன் 50 சதவீத மானிய தொகை ரூ.1,600 யை பயனாளி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஊரக வாழ்வாதார இயக்கத்தில்பதிவு செய்த மகளிர் குழு பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும். ஆதார், விதவை, கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிக்கான சான்று நகல், வங்கி கணக்கு புத்தகம், இலவச மாடு, ஆடு, கோழிப்பண்ணை திட்டத்தில் பயன்பெறவில்லை என்பதற்கான சான்றுடன் விண்ணப்பத்தை அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் அக்.,12க்குள் சமர்ப்பிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ