மேலும் செய்திகள்
இடிந்து விழும் நிலையில் ஊராட்சி அலுவலக கட்டடம்
15-Sep-2025
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஒன்றிய அலுவலக கட்டடத்தில் ஓராண்டிற்குள் விரிசல் விழுவதால் அங்கு வருவோர் அச்சத்துடன் செல்கின்றனர். சிங்கம்புணரியில் புதிதாக கட்டப்பட்ட ஒன்றிய அலுவலக கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்தாண்டு ஜூலை 29 ல் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ரூ. 3.5 கோடி செலவில் கட்டப்பட்ட இக்கட்டடத்தில் திறக்கப்பட்ட ஓராண்டிலேயே பல இடங்களில் விரிசல் விழுந்துள்ளது. ஆணையாளர் அலுவலக நுழைவு வாயில் முன்பாகவும், கான்கிரீட் துாண்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் அரசு நிதியை கொண்டு கட்டப்படும் கட்டடம் இப்படி சில நாட்களிலேயே உறுதியில்லாமல் சுவர்களில் வெடிப்பு ஏற்படுவது சமூக ஆர்வலர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கட்டடம் மட்டுமல்ல, இவ்வொன்றியத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டடங்களும் இதே போல் சில ஆண்டுகளிலேயே விரிசல் ஏற்பட்டு வருகிறது. வரும் காலங்களில் அரசு கட்டடங்களை முறையாக ஆய்வு செய்து தரமாக கட்டுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
15-Sep-2025