உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடியில் கூட்டுக்குடிநீர் குழாய் சேதம்: வீணாகும் குடிநீர்

இளையான்குடியில் கூட்டுக்குடிநீர் குழாய் சேதம்: வீணாகும் குடிநீர்

இளையான்குடி: இளையான்குடி தாலுகாவிற்குட்ட பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளுக்குட்பட்ட 160க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மாவட்டத்திலேயே அதிக ஊராட்சிகளை கொண்ட ஒன்றியம். அரசு பல்வேறு திட்டங்கள் தீட்டினாலும் பொதுமக்கள் இன்று வரை குடிநீருக்கு குடத்துடன் அலையும் நிலவத்தான் செய்கிறது. அனைத்து பகுதிகளிலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதித்து மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் நடைபெறுகிற நிலையில் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பல சாலையை ஒட்டியே பதிக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இளையான்குடி கண்மாய்க்கரை பஸ் ஸ்டாப் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதத்திற்கு மேலாக குடிநீர் வீணாகி வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ