உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாழ்வாக செல்லும் கேபிள் திருப்புத்துாரில் விபத்து அபாயம்

தாழ்வாக செல்லும் கேபிள் திருப்புத்துாரில் விபத்து அபாயம்

திருப்புத்தூ : திருப்புத்தூர் ரோடுகளில் பல இடங்களில் தாழ்வாக செல்லும் கேபிள் கம்பிகளால் விபத்து அச்சம் நிலவுகிறது. அரசு,தனியார் சார்பில் குடியிருப்புக்கள், வணிக நிறுவனங்களுக்கு இணைய இணைப்பு, கேபிள் டிவி, மின் இணைப்பிற்கான வயர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விதிகளின்படி குறிப்பிட்ட உயரத்தில் ரோட்டோரத்தில் கட்டிடங்களிலிருந்து குறிப்பிட்ட தூரம் விலகிச் செல்லும் வகையில் கேபிள்கள் கட்டப்படுவதில்லை. ரோட்டுக்கு குறுக்காகவும், ரோட்டோரத்தில் தாழ்வாகவும் வயர்கள்,கேபிள்கள் செல்கின்றன. பல இடங்களில் தனியார் கேபிள்கள் வெகுவாக தாழ்வாக செல்கின்றன. இதனால் கால்நடைகள் மற்றும் மனிதர்கள் இரவில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. மின்கம்பங்களில் கட்டப்படும் கேபிளால் மின்விபத்தும் ஏற்படலாம். மழை காலத்தில் விபத்து அபாயம் அதிகரிக்கும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் விதிகளின்படி கேபிளை கட்டி பாதுகாப்பான முறையில் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ