உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்த மான்

பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்த மான்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நாய்கள் கடித்ததால் பள்ளி வளாகத்தில் புள்ளிமான் இறந்து கிடந்தது.இவ்வொன்றியத்தில் ஏரியூர் மலை மற்றும் வனப் பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் திரிகின்றன. ஊருக்குள் தண்ணீர் தேடி வரும் மான்களை நாய்கள் விரட்டி கடிப்பது தொடர்கிறது. நேற்று காலை இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதி முன் புள்ளிமான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர், இறந்த மானின் உடலை பிரேத பரிசோதனை நடத்தி அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை