உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் மின்கம்பங்களை சாலையோரம் மாற்ற வலியுறுத்தல்

திருப்புவனத்தில் மின்கம்பங்களை சாலையோரம் மாற்ற வலியுறுத்தல்

திருப்புவனம்: திருப்புவனத்தில் பத்து வருடங்களுக்கு பின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கும் நிலையில் மின்கம்பங்களையும் சாலையோரத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்புவனத்தில் சாலையை ஒட்டி இருபுறமும் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. கடை உரிமையாளர்கள் பலரும் ரோட்டை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்திருப்பதால் தினசரி போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து நடந்து வருகின்றன.சாலையோரம் வைக்கப்பட வேண்டிய மின்கம்பங்கள் சாலைக்கு உள்ளேயே வைக்கப்பட்டதால் அதனை ஒட்டி இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது.நரிக்குடி ரோடு திரும்பும் இடத்தில் ரோட்டில் உள்ள இரும்பு மின்கம்பத்தால் பலமுறை விபத்து நிகழ்ந்தும் அது மாற்றியமைக்கப்படவில்லை.தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வரும் நிலையில் மின்வாரியமும் மின்கம்பங்களை சாலையோரம் மாற்றியமைக்க வேண்டும்.சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பவர்களிடம் பேரூராட்சி வரி வசூலிக்க கூடாது என நெடுஞ் சாலைத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.மீண்டும் சாலையை ஆக்கிரமிக்காமல் பேரூராட்சி நிர்வாகமும் மின்வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி