ஆர்ப்பாட்டம் ...
சிவகங்கை: அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லுாரி முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியர் தங்கமுனியாண்டி தலைமை வகித்தார். இக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.பணிநிரந்தரம் மற்றும் பணிபாதுகாப்பு வழங்க வேண்டும். யு.ஜி.சி., அறிவித்தபடி கவுர விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50,500 சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.