உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவிலில் ஆர்ப்பாட்டம்

காளையார்கோவிலில் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: காளையார்கோவிலில் 5 ஆண்டாக மூடியே கிடக்கும் என்.டி.சி., ஸ்பின்னிங் மில்லை திறக்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஐ.என்.டி.யு.சி., தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். அண்ணா தொழிற்சங்க தலைவர் சேதுபதி, சி.ஐ.டி.யு., தலைவர் முனியாண்டி, ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் சித்திர வேலு, அம்பேத்கர் தொழிற்சங்க தலைவர் சண்முகபாண்டியன், பாரதிய மஸ்துார் சங்கம் ஜோதி உட்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.கடந்த 5 ஆண்டாக பூட்டியே கிடக்கும் என்.டி.சி., மில்லை அரசு திறக்க வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கான 8 மாத சம்பள நிலுவை தொகையை வழங்க வேண்டும். 22 மாதங்களாக அரை நாள் சம்பளமும் வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை