உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை- விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் மறையூரில் நிழற்குடை அமைத்தது தொடர்பாக எழுந்த பிரச்னையில் பி.டி.ஓ., மற்றும் 2 பொறியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்த கலெக்டரை கண்டித்து சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க கிளை தலைவர் சுந்தரமகாலிங்கம்தலைமை வகித்தார். சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பாண்டிச்செல்வி, காளையார்கோவிலில் வட்டார தலைவர் ஷகிலா, மானாமதுரையில் வட்டார செயலாளர் ராஜேஸ்வரன், திருப்புவனத்தில் வட்டார செயலாளர் ஜெயபாண்டி, சாக்கோட்டையில் வட்டார தலைவர் ராமநாதன், கண்ணங்குடியில் மாவட்ட தலைவர் வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை தலைவர் பாஸ்கரன், தனபால், கார்த்திக், இணை செயலாளர் செந்தில், பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை