உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருதிப்பட்டியில் டெங்கு: சுகாதாரத்துறை முகாம்

மருதிப்பட்டியில் டெங்கு: சுகாதாரத்துறை முகாம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் டெங்கு பரவும் நிலையில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஊராட்சியில் சில நாட்களுக்கு முன் சிறுமிகள்இருவருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு காய்ச்சல் பரவியது. தகவலறிந்த பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மருதிப்பட்டியில் முகாமிட்டு சுகாதார மற்றும்டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இக்கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்து பல இடங்களில் மண்மூடிக் கிடக்கிறது. பெரும்பாலான வீடுகள் முன்பாக கழிவு நீர் வெளியேற வழி இல்லாமல் ரோட்டில் ஓடுகிறது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் உருவாகும் என்றாலும் கிராமத்தில் முறையான கால்வாய்கள் இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வேறுபல தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கிராமத்தில் குப்பை சேராமலும், கழிவு நீர் வெளியேற உரிய வழிவகை செய்யவும், பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை