உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அடிப்படை வசதி இல்லாத டெப்போ: டிரைவர்கள் அவதி

அடிப்படை வசதி இல்லாத டெப்போ: டிரைவர்கள் அவதி

சிவகங்கை : சிவகங்கை அரசு போக்குவரத்து கழக டெப்போவில் அடிப்படை வசதியின்றி டிரைவர், கண்டக்டரகள் அவதிப்படுகின்றனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட சிவகங்கை பணிமனையில் 66 பஸ்கள் இயங்குகிறது. இதில் 30 டவுன் பஸ்களும், 30 புறநகர் பஸ்களும், ஆறு மாற்று பஸ்கள் உள்ளது. இவற்றை இயக்கும் டிரைவர் கண்டக்டர்களுக்கு ஓய்வெடுப்பதற்கு பணிமனையில் அடிப்படை வசதி இல்லை. ஓய்வு அறையில் முறையான பாத்ரூம் வசதி இல்லை. இரவு நேரங்களில் ஓய்வறையில் பூச்சி தொந்தரவு இருப்பதாக டிரைவர் கண்டக்டர்கள் தெரிவிக்கின்றனர்.டிரைவர் ,கண்டக்டர்கள் கூறுகையில், 60 பஸ்களுக்கு மேல் இயங்கும் பணிமனையில் தரை தளம் மிகவும் மோசமாக உள்ளது. பணிமனையின் முகப்பு பகுதியில் தரைத்தளம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் பணிமனை சேரும் சகதியுமாக காணப்படுகிறது. ஓய்வறையில் அடிப்படை வசதி கிடையாது. முறையான பாத்ரூம் வசதி கிடையாது. பணிமனையின் முகப்பு பகுதிகளில் பேவர் பிளாக் அல்லது சிமென்ட் தரைத்தளம் அமைத்து, கண்டக்டர் டிரைவர்கள் ஓய்வறையில் அடிப்படை வசதி செய்து தர போக்குவரத்து துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.பணிமனை மேலாளர் கவியரசு கூறுகையில், முகப்பு பகுதி தரை தளத்தை சரி செய்யவும், கான்கிரீட் தரைதளம் அமைக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி