உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெளிமாநில தொழிலாளர் விபரம்; ஆன்லைனில் பதிவேற்ற உத்தரவு

வெளிமாநில தொழிலாளர் விபரம்; ஆன்லைனில் பதிவேற்ற உத்தரவு

சிவகங்கை; வெளி மாநில தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ள நிறுவனங்கள் அவர்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, மாவட்ட அளவில் உள்ள கடை நிறுவனம், ஓட்டல், அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான தொழில், பிற தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால், அவர்கள் பற்றிய விபரங்களை labour.tn.gov.in/ism என்ற இணைய தளத்தில் பதிவு செய்து, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.வெளி மாநில தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை கண்காணித்து, தீர்வு காண வருவாய், போலீஸ், தொழிலாளர் நலம், தொழிலக பாதுகாப்பு இயக்கம் இணைந்து செயல்படுகிறது. பிற மாநில தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் அச்சுறுத்தலோ, குறைகளோ இருந்தால், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு 1077 ல் புகார் தெரிவிக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை