உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குலதெய்வ கோயில்களில் பக்தர்கள்; பூஜை பொருட்கள் விலை உயர்ந்தது

குலதெய்வ கோயில்களில் பக்தர்கள்; பூஜை பொருட்கள் விலை உயர்ந்தது

மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடியில் மகா சிவராத்திரி, மாசிக்களரி விழாவிற்காக சிவன் கோயில்களிலும் குலதெய்வ கோயில்களிலும் நேற்று இரவு பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.தமிழகத்தில் மாசியில் வரும் மகா சிவராத்திரி மற்றும் மாசிக்களரி திருவிழாவையொட்டி அனைத்து சிவன் கோயில்களிலும் இரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து 4 கால பூஜை நடக்கும்.அதேபோன்று குலதெய்வ கோயில்களிலும் காலை முதல் மறுநாள் காலை வரை தொடர்ந்து பூஜைகளும் அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். நேற்று மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பக்தர்கள் 4 கால பூஜைகளிலும் பங்கேற்று தரிசனம் செய்தனர். குலதெய்வ கோயில்களுக்கு வெளியூர்களில் இருந்து வந்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சிவராத்திரி, மாசிக்களரி விழாவையொட்டி பூஜை பொருட்களான தேங்காய், பழங்கள், பூக்கள் மற்றும் மாலை ஆகியவற்றின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.வழக்கம் போல் ரூ.20க்கு விற்கப்படும் தேங்காய் ரூ. 25க்கும், ரூ.100க்கு விற்கப்படும் மாலை ரூ.150க்கும், ரூ.150 விற்கப்படும் மாலை ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ