உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருமலையில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதி

திருமலையில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதி

சிவகங்கை,: சிவகங்கை அருகே உள்ள திருமலை மலைகொழுந்தீஸ்வரர் கோயிலை சுற்றுலாத்துறை கண்டுகொள்ளாததால் பக்தர்கள் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை அருகே திருமலை கோயிலுக்கு சுற்றுலா பயணிகள், பவுர்ணமி கிரிவலம், அஷ்டமி, நவமி, பிரதோஷத்திற்கு பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள 8 ஆம் நுாற்றாண்டு பாண்டியர்கால குடவரை கோயில், 12ஆம் நுாற்றாண்டு சடையவர்மன் குலசேகர பாண்டியன் கால சிவன்கோயில், பாறை ஓவியம், சமணர் படுகை மலையில் உள்ளது. பழங்கால தமிழர்களின் சிறப்புகளை பாதுகாக்கும் நோக்கில் அரசு பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்தது.இங்கு நிழற்குடை, நவீன கழிப்பறை, மலை பாதைக்கு இரும்பு கைப்பிடி அமைத்துள்ளனர். இவை அனைத்தும் உரிய பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை