மேலும் செய்திகள்
குடிநீர் திட்ட குழிகள் மூடல்
27-May-2025
மானாமதுரை: தஞ்சாவூர் மானாமதுரை ரோட்டில் கல்குறிச்சி விலக்கு ரோடு அருகே இருந்த பள்ளத்தை தினமலர் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மூடினர்.தஞ்சாவூர் மானாமதுரை ரோட்டில் தல்லாகுளம் முனியாண்டி கோயில் எதிரே உள்ள மேம்பாலத்தில் இருந்து சிப்காட் பகுதி வரை ரோட்டில் இருபுறங்களிலும் தாழ்வாக இருப்பதாலும் கல்குறிச்சி விலக்கு ரோடு அருகே ரோட்டை ஒட்டி இருந்த மிகப்பெரிய பள்ளத்திலும் அடிக்கடி வாகன ஓட்டிகள் விழுந்து காயம் அடைந்து வந்தனர் .இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அந்த பள்ளத்தை சரி செய்தனர்.
27-May-2025