உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ் மீது கல்வீச்சு: தவறாக வழக்கு பதிவு இருந்தால் வாபஸ் பெறப்படும்: டி.ஐ.ஜி.,

பஸ் மீது கல்வீச்சு: தவறாக வழக்கு பதிவு இருந்தால் வாபஸ் பெறப்படும்: டி.ஐ.ஜி.,

கீழக்கரை : 'கீழக்கரை பகுதியில் நடந்த பஸ் மீது கல்வீச்சு தொடர்பான வழக்கில் சிலர் மீது தவறாக வழக்கு பதிவு செய்திருந்தால் வாபஸ் பெறப்படும்,' என டி.ஐ.ஜி.,(பொறுப்பு) ரவிக்குமார் கூறினார். பரமக்குடி கலவரத்தை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அசம்பாவிதங்கள் நடந்தன. கீழக்கரையில் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. இது தொடர்பாக போலீசார், பல்வேறு கிராமங்களில் சந்தேகத்திற்குரிய நபர்களை தேடி சென்றனர்.இதற்கு பெண்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதை தொடர்ந்து சிக்கல், கீழக்கரை, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி ஊராட்சி தலைவர்கள், கிராம தலைவர்களின் கருத்தாய்வு கூட்டம் கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., (பொறுப்பு) ரவிக்குமார் தலைமையில் எஸ்.பி.,காளிராஜ் மகேஷ் குமார், டி.எஸ்.பி.,முனியப்பன் முன்னிலையில் நடந்தது. பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் ரவிக்குமார் டி.ஐ.ஜி., கூறியதாவது: போலீசாரிடம் மக்களின் அணுகுமுறையை வலுப்படுத்தவும், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை நீக்கவும் நாங்கள் கூறிய அறிவுரைகளை குறிப்பிட்ட சமூக தலைவர்கள் ஏற்றுள்ளனர். கிராம தலைவர்களின் கோரிக்கைகளில் நியாயமானவை குறித்து பரிசீலிக்கப்படும். சிலர் மீது தவறாக வழக்குப்பதிவு செய்திருந்தால் வாபஸ் பெறப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ